ஜார்கண்ட் மக்கள் ஏழையாகவே இருப்பது ஏன்? தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

ஜார்கண்ட் மாநிலம் வளமான பகுதியாக இருந்தாலும் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் மட்டும் ஏழையாக இருப்பது ஏன்? என்று ஜார்கண்ட் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி தொடங்கி ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் டல்டான்காஜ் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘ஜார்கண்ட் வளமான பகுதியாக இருந்தபோதிலும் இங்குள்ள மக்கள் இன்னும் ஏழைகளாக
 

ஜார்கண்ட் மக்கள் ஏழையாகவே இருப்பது ஏன்? தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

ஜார்கண்ட் மாநிலம் வளமான பகுதியாக இருந்தாலும் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் மட்டும் ஏழையாக இருப்பது ஏன்? என்று ஜார்கண்ட் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி தொடங்கி ஐந்து கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் டல்டான்காஜ் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது, ‘ஜார்கண்ட் வளமான பகுதியாக இருந்தபோதிலும் இங்குள்ள மக்கள் இன்னும் ஏழைகளாக இருப்பதற்கு காரணம் இங்குள்ள ஆட்சியாளர்களே என்றும், மக்களின் கனவுகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என்றும், ஜனநாயகத்தில் அகங்காரம் நிலைக்காது என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

மேலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இம்மாநிலத்தை கொள்ளை அடித்துள்ளதாகவும், வாரிசு அரசியலை முடிவு கட்ட மக்களாகிய நீங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், நல்ல தீர்ப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

From around the web