நான் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை: சரத்பவார் திடீர் பல்டி

மகாராஷ்டிராவில் தேசியவாத கட்சி ஆதரவு கொடுத்ததால் திடீர் திருப்பமாக அம்மாநிலத்தில் இன்று பாஜக பதவியேற்று கொண்டது. நேற்று வரை சிவசேனா தலைமையில் தான் ஆட்சி நடக்கும் என அனைத்து செய்தி நிறுவனங்களும் தெரிவித்த நிலையில் இரவோடு இரவாக மிகப்பெரிய டுவிஸ்ட் நடந்துள்ளது இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும், பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றும், அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றும் சரத்பவார்
 

மகாராஷ்டிராவில் தேசியவாத கட்சி ஆதரவு கொடுத்ததால் திடீர் திருப்பமாக அம்மாநிலத்தில் இன்று பாஜக பதவியேற்று கொண்டது. நேற்று வரை சிவசேனா தலைமையில் தான் ஆட்சி நடக்கும் என அனைத்து செய்தி நிறுவனங்களும் தெரிவித்த நிலையில் இரவோடு இரவாக மிகப்பெரிய டுவிஸ்ட் நடந்துள்ளது

இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும், பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றும், அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதே கருத்தை தேசியவாத காங். மூத்த தலைவர் பிரபுல் படேல் அவர்களும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செய்தியாளர்களை சரத்பவார் சந்திக்கவிருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது தேசியவாத எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு நடத்தவும் சரத்பவார் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web