ஜார்கண்ட் தேர்தல் தேதி குறித்த விபரங்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தல் தேதிகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் விபரங்களை தற்போது பார்ப்போம் ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் இருக்கும் நிலையில் அங்கு மொத்தம் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 234 தொகுதிகள் இருக்கும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தை விட மூன்று மடங்கு குறைவாக தொகுதிகள் இருக்கும் ஜார்கண்டில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பது
 

ஜார்கண்ட் தேர்தல் தேதி குறித்த விபரங்கள்

ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தல் தேதிகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் விபரங்களை தற்போது பார்ப்போம்

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் இருக்கும் நிலையில் அங்கு மொத்தம் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 234 தொகுதிகள் இருக்கும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தை விட மூன்று மடங்கு குறைவாக தொகுதிகள் இருக்கும் ஜார்கண்டில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நவம்பர் 30ஆம் தேதி முதல்கட்டமாகவும், டிசம்பர் 7ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், டிசம்பர் 12ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும், டிசம்பர் 16ஆம் தேதி நான்காம் கட்டமாகவும், டிசம்பர் 20ஆம் கடைசி கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web