தமிழ்நாட்டையும் கொஞ்சம் கவனிங்க! அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கும் நெட்டிசன்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதமாகியும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வந்தன. மகாராஷ்டிரா சட்டசபை காலம் முடிந்த பின்னரும் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இருப்பினும் ஆட்சி அமைக்க சிவசேனா உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள் முயற்சித்து வந்தன இந்த நிலையில் திடீரென நேற்று பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைக்க, அதற்கு சரத் பவாரின் தேசியவாத
 

தமிழ்நாட்டையும் கொஞ்சம் கவனிங்க! அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கும் நெட்டிசன்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதமாகியும் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வந்தன. மகாராஷ்டிரா சட்டசபை காலம் முடிந்த பின்னரும் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இருப்பினும் ஆட்சி அமைக்க சிவசேனா உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள் முயற்சித்து வந்தன

இந்த நிலையில் திடீரென நேற்று பாஜக தலைமையிலான அரசு ஆட்சி அமைக்க, அதற்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் ஆதரவு கொடுத்ததால் இப்போதைக்கு அங்கு அரசியல் குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ளது

இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை சிவசேனா தலைமையிலான ஆட்சி தான் நடைபெறும் என்ற அரசியல் சூழல் இருந்த நிலையில் திடீரென இரவோடு இரவாக அரசியல் களம் மாறி அதிகாலையில் பாஜகவின் தேவேந்திரநாத் பட்னஸ் முதல்வராக பதவியேற்றதும் அரசியல் விமர்சகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியாகும்

இரவோடு இரவாக அமிர்ஷா செய்த மாயாஜாலம் தான் இதற்கு காரணம் என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். ஆட்சி அமைப்பதில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பதில் தயக்கம் காட்டிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி காலதாமதம் செய்து வந்ததை மிகச்சரியாக பயன்படுத்திய அமித்ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து அதில் ஒரு பகுதியை இழுத்து வந்து ஆட்சியை அமைத்து விட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் தமிழகத்தையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நெட்டிசன்கள் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிமுக திமுக ரஜினி என இருக்கும் நிலையில் அமிர்ஷா களமிறங்கினால் என்ன நடக்கும் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

From around the web