திடீரென தீப்பற்றி எரிந்த செல்போன்: சியாமி கொடுத்த சமாளிப்பு விளக்கம்

ஆன்லைனில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சியாமி செல்போன் திடீரென தீப்பற்றி எரிந்ததற்கு சியாமி நிறுவனம் கொடுத்த விளக்கம் சமாளிக்கும் வகையில் இருப்பதாக வாடிக்கையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். மும்பையை சேர்ந்த ஈஷ்வர் செளஹான் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் ஜியோமி 7 எஸ் போனை வாங்கியுள்ளார். அந்த போனை அவர் மேஜை மீது வைத்திருந்ததாகவும், இந்த நிலையில் அந்த போன் திடீரென தீப்பற்றி எரியவும் தொடங்கியதாகவும், போன் மோசமான நிலையில் இருந்ததால் சிம் கார்டை கூட வெளியே
 

திடீரென தீப்பற்றி எரிந்த செல்போன்: சியாமி கொடுத்த சமாளிப்பு விளக்கம்

ஆன்லைனில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சியாமி செல்போன் திடீரென தீப்பற்றி எரிந்ததற்கு சியாமி நிறுவனம் கொடுத்த விளக்கம் சமாளிக்கும் வகையில் இருப்பதாக வாடிக்கையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மும்பையை சேர்ந்த ஈஷ்வர் செளஹான் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் ஜியோமி 7 எஸ் போனை வாங்கியுள்ளார். அந்த போனை அவர் மேஜை மீது வைத்திருந்ததாகவும், இந்த நிலையில் அந்த போன் திடீரென தீப்பற்றி எரியவும் தொடங்கியதாகவும், போன் மோசமான நிலையில் இருந்ததால் சிம் கார்டை கூட வெளியே எடுக்க முடியவில்லை என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து சியோமி நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘இந்த குற்றச்சாற்றில் உண்மையில்லை. போன் தயாரிப்பில் எவ்வித குறைபாடும் இல்லை. வாடிக்கையாளர் ஏற்படுத்திய சேதமே போன் வெடித்ததற்கு காரணம் என்றும், செல்போனை தலையணைகளுக்கு அடியில் வைத்து தூங்குவது, இரவு முழுவதும் சார்ஜ் செய்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என்றும், சமாளிக்கும் விதத்தில் இருப்பதாகவும் வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

From around the web