மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று அதிரடியாக சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தது இதன்படி மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸ் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவும் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என்று கண்டிப்புடன் கூறிவிட்டது. மேலும் இன்று மாலை 5 மணிக்குள் எம்.எல்.ஏக்கள்
 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று அதிரடியாக சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்தது

இதன்படி மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பெரும்பான்மையை நிரூபிக்க பட்னாவிஸ் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலை செய்யவும் அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதி இல்லை என்று கண்டிப்புடன் கூறிவிட்டது. மேலும் இன்று மாலை 5 மணிக்குள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்க வேண்டும் என்றும், இன்றே இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைக்கால சபாநாயகர் தலைமையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web