உன்னாவ் இளம்பெண் பரிதாப மரணம்: ஜாமீனில் வெளிவந்தவரால் ஏற்பட்ட விபரீதம்

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 5 போ் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் என்ற நகரை சோ்ந்த ஒரு இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தததை அடுத்து இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே
 

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் 5 போ் கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் என்ற நகரை சோ்ந்த ஒரு இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தததை அடுத்து இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நபர் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று உன்னாவ் இளம்பெண்ணை தீ வைத்து கொளுத்தினர். இவர்களில் ஜாமீனில் வெளிவந்தவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது சிகிச்சையின் பலனின்றி பரிதாபமாக பலியானார்.

From around the web