வங்கதேச அமைச்சரை அடுத்து ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து: குடியுரிமை சட்டம் காரணமா?

குடியுரிமை சட்டதிருத்தம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வங்க தேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன் தமது இந்தியப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார். அவர் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் வங்கதேச இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற மசோதா காரணமாக அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் அபே உடனான இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பும்
 
வங்கதேச அமைச்சரை அடுத்து ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து: குடியுரிமை சட்டம் காரணமா?

குடியுரிமை சட்டதிருத்தம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வங்க தேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மோமன் தமது இந்தியப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

அவர் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் வங்கதேச இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற மசோதா காரணமாக அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் அபே உடனான இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகிய இருவரும் அசாமில் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அசாமில் நிலைமை சரியில்லை என்பதால் இந்த சந்திப்பு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜப்பான் பிரதமரின் செயலாளர் அறிவிப்பு செய்துள்ளார்.

From around the web