ஜார்கண்ட்டில் பாஜக ஆட்சிதான்: முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்கண்ட் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுவதும் வருவதற்கு முன்பே எதையும் ஊகிப்பது தவறு என்றும் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசங்களில் தான் பல தொகுதிகளில் பின்னணியில் இருப்பதாகவும் என மீண்டும் ஜார்கண்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும், முதல்வர் ரகுபர் தாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் “ஜார்க்கண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பது உறுதி என்றும், தொடக்கத்தில் வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக முடிவுகள் செல்லலாம். ஆனால், பாஜக ஆட்சிதான் மீண்டும் அமையும் என்றும் அவர்
 
ஜார்கண்ட்டில் பாஜக ஆட்சிதான்: முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்கண்ட் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முழுவதும் வருவதற்கு முன்பே எதையும் ஊகிப்பது தவறு என்றும் பாஜக குறைந்த வாக்கு வித்தியாசங்களில் தான் பல தொகுதிகளில் பின்னணியில் இருப்பதாகவும் என மீண்டும் ஜார்கண்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும், முதல்வர் ரகுபர் தாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் “ஜார்க்கண்டில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பது உறுதி என்றும், தொடக்கத்தில் வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக முடிவுகள் செல்லலாம். ஆனால், பாஜக ஆட்சிதான் மீண்டும் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணியும், பாஜகவும் கடும் போட்டியுடன் குறைவான இடங்களில்தான் முன்னிலையில் இருக்கின்றன. எப்படி வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம். என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியின் தலைவர் பாபுலால் மாரண்டி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “அரசியலில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சியல்ல. ஆதலால், தேர்தல் முடிவுகள் வரட்டும். மக்கள் யாருக்குத் தீர்ப்பளித்துள்ளனர் என்பதைப் பொறுத்து முடிவெடுப்போம்” என்றார்

From around the web