குடியுரிமை சட்டம் குறித்து பிரபல நடிகை கொடுத்த புகாரால் பரபரப்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஒருவர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயலட்சுமி சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவர் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
 
குடியுரிமை சட்டம் குறித்து பிரபல நடிகை கொடுத்த புகாரால் பரபரப்பு

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஒருவர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயலட்சுமி சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவர் சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த சட்டம் குறித்து தவறான தகவல்களை ஒருசிலர் பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரும்பாலான நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து பதிவு செய்து வரும் நிலையில் நடிகை ஜெயலட்சுமி இந்த சட்டத்திற்கு ஆதரவான கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web