புத்தாண்டு விபரீதங்கள்- குடித்து விட்டு மகன் முன்னேயே தந்தையை கொன்ற சைக்கோ கொடூரர்கள்

ஒவ்வொரு வருடமும் மனிதன் இந்த வருடமாவது சந்தோஷமாக இருக்க மாட்டோமா என நினைத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஆனால் வருடத்தின் முதல் நாள் வருட துவக்கத்திலேயே சிலர் செய்யும் விபரீதங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் மது குடித்து விட்டு பைக் ரேஸ் விடுதல் இதனால் ஏற்படும் உயிரிழப்பு என ஏதாவது வருடம் தோறும் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டு வருகிறது. மதுகுடித்து விட்டு சிறுநகரங்களில் தகராறு கொலைகள் எனவும் நடக்கிறது. இப்படி வருட துவக்கமே இருந்தால் என்ன செய்வது. கடலூர்
 

ஒவ்வொரு வருடமும் மனிதன் இந்த வருடமாவது சந்தோஷமாக இருக்க மாட்டோமா என நினைத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஆனால் வருடத்தின் முதல் நாள் வருட துவக்கத்திலேயே சிலர் செய்யும் விபரீதங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் மது குடித்து விட்டு பைக் ரேஸ் விடுதல் இதனால் ஏற்படும் உயிரிழப்பு என ஏதாவது வருடம் தோறும் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டு வருகிறது.

புத்தாண்டு விபரீதங்கள்- குடித்து விட்டு மகன் முன்னேயே தந்தையை கொன்ற சைக்கோ கொடூரர்கள்


மதுகுடித்து விட்டு சிறுநகரங்களில் தகராறு கொலைகள் எனவும் நடக்கிறது. இப்படி வருட துவக்கமே இருந்தால் என்ன செய்வது.
கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் அருகே வீடுகள் அருகே குடித்து விட்டு கஞ்சா போதையில் ஆடிய இளைஞர்களை தட்டிக்கேட்ட வேல்முருகன் என்ற இளைஞரை கொடூரமாக கொலை செய்து ட்ரான்ஸ்பார்ம் அருகே வீசியுள்ளனர். வேல்முருகனுக்கு மூன்று சிறு குழந்தைகளாம் பாவம் அந்த குழந்தைகள்.
இது போல கடலூர் மாவட்டம் வடலூர் அருகிலுள்ள நெத்தனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காந்தாராவ்). இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு சந்தியா, சுகந்தி ஆகிய மகள்களும் செல்வமணி செல்வகுமார் என்ற மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மதுபோதையில் புத்தாண்டு கொண்டாடினார்கள். அப்போது காந்தாராவ் வீட்டிலிருந்து சிலர் பெஞ்சை தூக்கி கொண்டு சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்ட ஏற்பாடும் செய்தனர். இதற்கிடையே, அந்த இளைஞர்களுடன் இருந்த செல்வகுமாரை காந்தாராவ் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். மேலும் பெஞ்சை எடுக்கவும் முயன்றார். அப்போது அங்கு போதையில் இருந்த வாலிபர்கள் கேக் வெட்டுவதற்கு முன்பே பெஞ்சை எடுக்க கூடாது என கூறி, தகராறில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று கட்டையால் மகன் செல்வகுமார் கண்ணெதிரே சரமாரியாக காந்தாராவை தாக்கியுள்ளனர். இதில் காந்தாராவ் இறந்தார்.
எவ்வளவு கொடூரம் பாருங்கள். அரசுதான் இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை.

From around the web