ஊராட்சியின் துப்புறவு தொழிலாளி- இப்போ அந்த ஊராட்சிக்கே தலைவி

ஆண்டவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற ஒரு பேச்சு உண்டு. அதன்படி ஒருவர் உழைப்புக்கு தகுந்த ஊதியத்தை சிலருக்கு சரியாக கொடுத்து விடுகிறான் என கூறலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கான்சாபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊராட்சியின் துப்புறவு தொழிலாளியாக வேலை பார்த்தவர் சரஸ்வதி. கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தலைவர் பதவிக்கு போட்டி இட்டுள்ளார். அப்போது தேர்தல் ரத்து செய்யப்படவே
 

ஆண்டவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற ஒரு பேச்சு உண்டு. அதன்படி ஒருவர் உழைப்புக்கு தகுந்த ஊதியத்தை சிலருக்கு சரியாக கொடுத்து விடுகிறான் என கூறலாம்.

ஊராட்சியின் துப்புறவு தொழிலாளி- இப்போ அந்த ஊராட்சிக்கே தலைவி

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கான்சாபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊராட்சியின் துப்புறவு தொழிலாளியாக வேலை பார்த்தவர் சரஸ்வதி. கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் இவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தலைவர் பதவிக்கு போட்டி இட்டுள்ளார். அப்போது தேர்தல் ரத்து செய்யப்படவே மீண்டும் தனக்கு வேலை கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

தற்போது நடந்த ஊராட்சி தலைவர் தேர்தலில் சரஸ்வதி உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். இதில், சரஸ்வதி 1,113 ஓட்டுகள் பெற்று, தனக்கு எதிராக போட்டியிட்ட கணேசனைக் காட்டிலும் 200 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

From around the web