மனிதநேயம் இல்லாத சூர்யா: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

சூர்யாவுக்கு மனிதநேயமே இல்லை என அவருடைய படத்தை பார்த்தபோது தான் தவறாக புரிந்து கொண்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சூர்யா மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய செங்கோட்டையன் ’சூர்யாவின் சிங்கம் படத்தை நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன். அப்போது அவர் வில்லன்களை அடித்து நொறுக்குவதை பார்த்தபோது இவருக்கு மனிதநேயமே இல்லையா என்று நினைத்தேன்
 

மனிதநேயம் இல்லாத சூர்யா: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

சூர்யாவுக்கு மனிதநேயமே இல்லை என அவருடைய படத்தை பார்த்தபோது தான் தவறாக புரிந்து கொண்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சூர்யா மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய செங்கோட்டையன் ’சூர்யாவின் சிங்கம் படத்தை நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன். அப்போது அவர் வில்லன்களை அடித்து நொறுக்குவதை பார்த்தபோது இவருக்கு மனிதநேயமே இல்லையா என்று நினைத்தேன்

ஆனால் தற்போது நான் அவரிடம் பேசியபோது அவர் செய்துள்ள செயல்களை பார்க்கும் போதும் அவர் எவ்வளவு பெரிய மனித நேயம் உள்ளவர் என்பது எனக்கு புரிய வருகிறது. அவர் தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு கல்வி அறிவு கொடுத்து வருகிறார் அவருடைய செயலுக்கு எனது பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்

From around the web