இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல நடிகை: பொதுமக்கள் ஆச்சரியம்

பிரபல நடிகையும் அரசியல்வாதியும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றது பொதுமக்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த புதூரில் இருந்து நகரி வரை இரு சக்கர வாகனத்தில் சென்ற நடிகை ரோஜா, இதுகுறித்த பிரசாரத்திலும் ஈடுபட்டார். அவருடன் கட்சி தொண்டர்களும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இதேபோன்ற
 
இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபல நடிகை: பொதுமக்கள் ஆச்சரியம்

பிரபல நடிகையும் அரசியல்வாதியும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றது பொதுமக்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த
புதூரில் இருந்து நகரி வரை இரு சக்கர வாகனத்தில் சென்ற நடிகை ரோஜா, இதுகுறித்த பிரசாரத்திலும் ஈடுபட்டார். அவருடன் கட்சி தொண்டர்களும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

இதேபோன்ற விழிப்புணர்வை ஒவ்வொரு எம்.எல்.ஏவும் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலமானவர்கள் இதுபோன்ற விழிப்புணர்வு ஊர்வலம் செல்ல வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது

From around the web