விவாகரத்துக்கு இப்படி ஒரு விளக்கமா? முட்டாள்தனமானது என பிரபல நடிகை கண்டனம்

விவாகரத்து பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘திருமண விவாகரத்து பெறுவதில் படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் தான் அதிகம் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் அப்படியே செய்தாலும் அது குறைவான சதவிகிதம் தான் என்றும் கூறியிருந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்துக்கு நடிகை சோனம் கபூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
 
விவாகரத்துக்கு இப்படி ஒரு விளக்கமா? முட்டாள்தனமானது என பிரபல நடிகை கண்டனம்

விவாகரத்து பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘திருமண விவாகரத்து பெறுவதில் படித்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் தான் அதிகம் என்றும், ஏழை எளியவர்கள் மற்றும் கல்வி கற்காதவர்கள் விவாகரத்து செய்வதில்லை என்றும் அப்படியே செய்தாலும் அது குறைவான சதவிகிதம் தான் என்றும் கூறியிருந்தார்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த கருத்துக்கு நடிகை சோனம் கபூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் ”அறிவுள்ள எந்த மனிதரும் இப்படிப் பேசுவார்களா? இந்த கருத்து முட்டாள்தனமான பிற்போக்கான கருத்து” என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்

ஆர்எஸ்எஸ் தலைவரின் திருமணம் விவாகரத்து குறித்த கருத்தும் அதற்கு சோனம் கபூர் தெரிவித்த பதிலடியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

From around the web