முதல்வர் பதவி ஏற்றவுடன் மோடி, அமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்

சமீபத்தில் டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார். இந்த இருவர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும் என்று கூறப்பட்டாலும் மத்திய அரசுடன் இனிமேல் இணக்கமாக செல்லவே அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது மேலும் அமித்ஷாவுடன் இன்றைய சந்திப்பின் போது போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக தகவல்கள்
 
முதல்வர் பதவி ஏற்றவுடன் மோடி, அமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்

சமீபத்தில் டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார். இந்த இருவர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும் என்று கூறப்பட்டாலும் மத்திய அரசுடன் இனிமேல் இணக்கமாக செல்லவே அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

மேலும் அமித்ஷாவுடன் இன்றைய சந்திப்பின் போது போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்த நிலையில் இந்த முறை மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு டெல்லி மக்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுக்கொள்ள முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

From around the web