முதல்முறையாக இந்தியாவில் இரட்டை செல்ஃபி கேமரா செல்போன்

இந்தியாவின் முதல்முறையாக செல்ஃபி கேமரா செல்போன் ஒன்றை ரியல்மி என்ற நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள X50 Pro 5G போன்கள் மிக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் என்பதும் இதன் விலை ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த செல்போன் X50 Pro 5G புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. LPDDR5 RAM ரேம் மற்றும் வைஃபை 6-ஐ கொண்டுள்ளது. LPDDR5 RAM 29% வேகமானது.
 
முதல்முறையாக இந்தியாவில் இரட்டை செல்ஃபி கேமரா செல்போன்

இந்தியாவின் முதல்முறையாக செல்ஃபி கேமரா செல்போன் ஒன்றை ரியல்மி என்ற நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள X50 Pro 5G போன்கள் மிக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் என்பதும் இதன் விலை ரூ.39,999 மற்றும் ரூ.44,999 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த செல்போன் X50 Pro 5G புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. LPDDR5 RAM ரேம் மற்றும் வைஃபை 6-ஐ கொண்டுள்ளது. LPDDR5 RAM 29% வேகமானது. மேலும் LPDDR4X ரேம் உடன் ஒப்பிடும்போது 14% குறைவான சக்தியையே பயன்படுத்தும் என கூறியுள்ளது. மேலும் ரியல்மி நிறுவனம். ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி UI-ல் இயங்குகிறது.

இதில் பிரதானமாக 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 20x ஹைப்ரிட் ஜூமை ஆதரிக்கிறது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கத்தில் உள்ள பஞ்ச்-ஹோலில் 2 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 32 எம்பி வைட் ஆங்கிள் சோனி ஐஎம்எக்ஸ் 616 சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் மாடல் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web