திருப்பதி பழனியை அடுத்து திருச்சியிலும் தடை: பக்தர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், திருப்பதி கோவில் மூடப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த இரண்டு முக்கிய கோவில்களும் மூடப்பட்டாலும், பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் திருப்பதி, பழனியை அடுத்து தற்போது திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மார்ச்
 
திருப்பதி பழனியை அடுத்து திருச்சியிலும் தடை: பக்தர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், திருப்பதி கோவில் மூடப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த இரண்டு முக்கிய கோவில்களும் மூடப்பட்டாலும், பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் திருப்பதி, பழனியை அடுத்து தற்போது திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

மார்ச் 31ம் தேதி வரை பக்தர்கள் யாரும் கோவில்களுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலேயே தமிழக அரசின் அறநிலையத் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web