விமானங்களில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடு: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விமானங்களில் பயணம் செய்வதில் சில கட்டுப்பாடுகளை அமைச்சர் தெரிவித்தார். இதன்படி பயணிகள் தெரிவிக்கும் சுய தகவல் அல்லது ஆரோக்கிய சேது செயலி தரவு அடிப்படையில் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆரோக்கிய சேது செயலியின் நிலை சிவப்பு நிறமாக இருந்தால் பயணம் செய்ய அனுமதி இல்லை
 
விமானங்களில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடு: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விமானங்களில் பயணம் செய்வதில் சில கட்டுப்பாடுகளை அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி பயணிகள் தெரிவிக்கும் சுய தகவல் அல்லது ஆரோக்கிய சேது செயலி தரவு அடிப்படையில் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஆரோக்கிய சேது செயலியின் நிலை சிவப்பு நிறமாக இருந்தால் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

மேலும் முதற்கட்டமாக மூன்றில் ஒரு பங்கு விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விமான கட்டணம் பயண கால அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, விமானங்களில் நடு இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுவாரக்ள் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து தனியார் விமான நிறுவனங்கள் இப்போதே விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web