திமுக வளர்ந்ததே முடிதிருத்தும் நிலையங்களில் தான்: பிடிஆர் பழனிவேல்ராஜன் அறிக்கை

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பிடிஆர் பழனிவேல்ராஜன் தனது பேச்சின் இடையே முடிதிருத்தும் சமூகத்தின் பெயரை அவர் உச்சரித்துவிட்டார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுகுறித்து தான் வருத்தப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் திமுக வளர்ந்ததே முடிதிருத்தும் நிலையங்களில் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது முழு அறிக்கை இதோ: கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகளின் மெத்தனமான, அலட்சியமான செயல்பாடுகளையும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் சுணக்கத்தையும்
 
திமுக வளர்ந்ததே முடிதிருத்தும் நிலையங்களில் தான்: பிடிஆர் பழனிவேல்ராஜன் அறிக்கை

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பிடிஆர் பழனிவேல்ராஜன் தனது பேச்சின் இடையே முடிதிருத்தும் சமூகத்தின் பெயரை அவர் உச்சரித்துவிட்டார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுகுறித்து தான் வருத்தப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் திமுக வளர்ந்ததே முடிதிருத்தும் நிலையங்களில் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது முழு அறிக்கை இதோ:

கொரோனா காலத்தில்‌ மத்திய மாநில அரசுகளின்‌ மெத்தனமான, அலட்சியமான செயல்பாடுகளையும்‌, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில்‌ இருக்கும்‌ சுணக்கத்தையும்‌ தனியார்‌ தொலைக்காட்சி ஒன்றின்‌ விவாதத்தில்‌ விமர்‌ஏித்தேன்‌. அப்போது, ‘முடிஇருத்தும்‌ கடைகளைத்‌ இறப்பதில்‌ கூட இந்த அரசுக்கு சரியான திட்டமிடுதல்‌ இல்லை’ என்பதைச்‌ சுட்டிக்‌ காட்டி, மதுக்கடைகளை திறக்க மாநிலங்களே முடிவெடுக்கலாம்‌ என உத்தரவிடும்‌ மத்திய அரசு, முடி திருத்தும்‌ கடைகளை திறக்க மட்டும்‌ ஏன்‌ அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினேன்‌. அச்சமயம்‌ குறிப்பிட்ட சமூகத்தின்‌ பெயரைத்‌ தவறுதலாக உச்சரித்துவிட்டேன்‌. இது எனது பேச்சினூடாக வந்துவிட்டது. அதற்காக எனது வருத்ததைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தொடக்க காலம்‌ முதல்‌ திராவிட இயக்கத்தின்‌ விளைநிலமாக இருந்தவை முடிதிருத்தும்‌ நிலையங்கள்‌. திராவிட இயக்க இதழ்கள்‌ அனைத்தையும்‌ வாங்கி வைத்து, பகுத்தறிவு, இன உணர்வு, மொழிப்பற்று
ஆகியவற்றின்‌ பிரச்சார மையங்களாக அவை இருந்தன. அவை தலைமுடி திருத்தும்‌ கடைகள்‌ மட்டுமல்ல, முடி எனப்படும்‌ மன்னனைத்‌ திருத்தும் ‌கடைகளாகச்‌ செயல்பட்டன. திராவிட இயக்கத்தில்‌ நான்காவது
தலைமுறையாகச்‌ செயல்பட்டு வரும்‌ நான்‌ இத்தகைய வரலாற்றை அறிந்தவன்‌. என்றாலும்‌ தவறுதலாக அச்சொல்லைப்‌ பயன்படுத்தியமைக்காக மீண்டும்‌ ஒருமுறை எனது வருத்தத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு பிடிஆர் பழனிவேல்‌ தியாகராஜன்‌ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From around the web