கொரோனாவால் உயிர் இழந்த மருத்துவர் உடலை யாரும் வராததால் மகனே தகனம் செய்த அவலம்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரை சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் தகனம் செய்யவே மறுத்தது பழைய கதை. மக்கள் எவ்வளவு ஈவிரக்கமில்லாமல் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே உதாரணம். முன்பையில் கணேஷ் நகர் என்ற பகுதியில் வசித்த வயதான மருத்துவர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி ஏற்பாடு செய்ய மகன் பல
 

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் ஒருவரை சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் தகனம் செய்யவே மறுத்தது பழைய கதை. மக்கள் எவ்வளவு ஈவிரக்கமில்லாமல் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே உதாரணம்.

முன்பையில்

கணேஷ் நகர் என்ற பகுதியில் வசித்த வயதான மருத்துவர் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி ஏற்பாடு செய்ய மகன் பல இடங்களில் கேட்டுள்ளார்

அவருக்கு எந்த வண்டியும் கிடைக்காத நிலையில். தந்தையின் சடலத்துடன் நீண்ட நேரம் காத்திருந்திருந்துள்ளார்.

கொரோனாவால் உயிர் இழந்த மருத்துவர் உடலை யாரும் வராததால் மகனே தகனம் செய்த அவலம்

இறுதியாக வண்டி ஒன்று கிடைத்துள்ளது அதிலும் சோதனையாக அவரது உடலை ஏற்ற அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை பின்னர் தானே பாதுகாப்பு உடையணிந்து நண்பரின் உதவியுடன் தந்தையின் உடலை வண்டியில் ஏற்றி இடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

இடுகாட்டிலும் உடலை தகனம் செய்ய ஒருவரும் வரவில்லை. பின்னர் மகனே அனைத்து வேலைகளையும் செய்து தனது தந்தையின் உடலை தகனம் செய்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் இறுதி சடங்கிற்கு உதவ முன்வராத மனிதாபிமானமில்லா செயலை என்னவென்று சொல்வது

From around the web