ஏடிஎம் ஐ தொடாமல் பணம் எடுப்பது எப்படி? புதிய தகவல்

ஏடிஎம் மிஷின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக ஆங்காங்கே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதிகளை ஒரு சில வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன இதன்படி புதிய தொழில்நுட்பத்தில் ஏடிஎம் தற்போது வடிவமைத்துள்ளது. வழக்கமான கார்டு அல்லது பின் நம்பரை பயன்படுத்தாமல் செல்போனில் வங்கிகளின் செயலியை டவுன்லோடு செய்து அதன் பின்னர் ஏடிஎம் திரைக்கு சென்று அதில் காட்டும் கியூ ஆர் கோட்-ஐ மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்யவேண்டும்
 
ஏடிஎம் ஐ தொடாமல் பணம் எடுப்பது எப்படி? புதிய தகவல்

ஏடிஎம் மிஷின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக ஆங்காங்கே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் புதிய வசதிகளை ஒரு சில வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன

இதன்படி புதிய தொழில்நுட்பத்தில் ஏடிஎம் தற்போது வடிவமைத்துள்ளது. வழக்கமான கார்டு அல்லது பின் நம்பரை பயன்படுத்தாமல் செல்போனில் வங்கிகளின் செயலியை டவுன்லோடு செய்து அதன் பின்னர் ஏடிஎம் திரைக்கு சென்று அதில் காட்டும் கியூ ஆர் கோட்-ஐ மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்யவேண்டும்

அவ்வாறு ஸ்கேன் செய்த பின்னர் எவ்வளவு ரூபாய் எடுக்க வேண்டும் என்பதை செயலிலேயே பதிவு செய்தால் அந்த தொகை ஏடிஎம் திரையிலும் தெரியும். இதனை அடுத்து ஓகே கொடுத்தால் பணம் வந்துவிடும்.

ஏடிஎம் எந்திரத்தை தொடாமலேயே பணம் எடுப்பதால் ஸ்கிம்மிங் கருவி மோசடிகளும் குறையும் எனவும் வங்கிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸில் இருந்தும் தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web