ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா? பரபரப்பு தகவல்

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிவடைவதற்குள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலைய்ல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் சசிகலா சிறையில்
 

ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா? பரபரப்பு தகவல்

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிவடைவதற்குள் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலைய்ல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் சசிகலா சிறையில் இருக்கும் பார்ப்பன அக்ராஹர சிறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு முன்னரே சசிகலா விடுதலையானால் தற்போதைய அதிமுக இதேபோல் இருக்குமா? அல்லது பெரும் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web