சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா: அலுவலகம் மூடல்

தூத்துக்குடியில் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை உலுக்கியது இந்த சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் குறிப்பாக திரைப்பட கலைஞர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாகவே ஏற்றி நடத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து அதிரடியாக 10 போலீசார்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு
 

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா: அலுவலகம் மூடல்

தூத்துக்குடியில் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை உலுக்கியது

இந்த சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் குறிப்பாக திரைப்பட கலைஞர்கள் பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாகவே ஏற்றி நடத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து அதிரடியாக 10 போலீசார்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி இடமிருந்து சிபிஐ கைப்பற்றி விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் வழக்கை விசாரணை செய்துவரும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து மதுரை ஆத்திகுளம் பகுதியில் இயங்கிவந்த சிபிஐ அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த அலுவலகத்தில் தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு இருப்பதாகவும் இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சாத்தான்குளம் வழக்கை விசாரிப்பதில் சிபிஐ தரப்பினருக்கு ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web