விகாஸ் துபேவை என்கவுண்டர் செய்த தமிழகத்தை சேர்ந்த கான்பூர் எஸ்பி, திடீர் இடமாற்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க சென்ற போலீசார் மீது விகாஸ் துபேவின் கூட்டாளிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உட்பட போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, 25 தனிப்படைகளை அமைக்கப்பட்டு சுமார் 2000 போலீசார் விகாஸ் துபேவை தேடி வந்தனர். இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் விகாஸ் துபேவை கைது செய்து அவரை உத்தரபிரதேச மாநிலத்திற்கு
 

விகாஸ் துபேவை என்கவுண்டர் செய்த தமிழகத்தை சேர்ந்த கான்பூர் எஸ்பி, திடீர் இடமாற்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க சென்ற போலீசார் மீது விகாஸ் துபேவின் கூட்டாளிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உட்பட போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, 25 தனிப்படைகளை அமைக்கப்பட்டு சுமார் 2000 போலீசார் விகாஸ் துபேவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் விகாஸ் துபேவை கைது செய்து அவரை உத்தரபிரதேச மாநிலத்திற்கு கொண்டு செல்லும் வழியில் விகாஸ் துபே போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு முக்கிய காரணமாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ் குமார் (கான்பூர் SSP) தலைமையிலான போலீசார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கான்பூர் எஸ்.எஸ்.பி. தினேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் ஜான்சி எஸ்.எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web