இயக்குனர் வேலுபிரபாகரன் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

இந்து மதக் கடவுளை குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் வேலுபிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழ் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் ’கடவுள்’ உள்ளிட்ட ஒரு சில சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த நிலையில் அவர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் குறித்தும், இந்து மதம் கடவுள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி ஒன்றில் கருத்து கூறியதாக தெரிகிறது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இந்து
 

இயக்குனர் வேலுபிரபாகரன் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

இந்து மதக் கடவுளை குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் வேலுபிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் ’கடவுள்’ உள்ளிட்ட ஒரு சில சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்

இந்த நிலையில் அவர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் குறித்தும், இந்து மதம் கடவுள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி ஒன்றில் கருத்து கூறியதாக தெரிகிறது

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் இந்து கடவுளை அவதுறு பேசியதாக இயக்குனர் வேலுபிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் சேனலை சேர்ந்தவர்கள் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மத கடவுள்களை தொடர்ந்து அவதூறாக பேசியவர்கள்ர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web