விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் குறித்த ஆச்சரிய தகவல்

கேரளாவில் நேற்று நடந்த விமான விபத்தில் கேப்டன் சாதே என்பவர் பலியானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்தது இந்த நிலையில் கேப்டன் சாதே மற்றும் இவருடைய குடும்பத்தினர் குறித்த தகவல் தற்போது வெளிவந்து ஆச்சரியத்தை அளித்துள்ளது மும்பையை சேர்ந்த கேப்டன் சாதே கடந்த 1981-ஆம் ஆண்டு பூனாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து சிறந்த வீரருக்கான தங்க பதக்கம் பெற்றார். அதன்பின் இந்திய விமானப்படையில் விமானியாக பணிபுரிந்தவர் போர் விமானங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் குறித்த ஆச்சரிய தகவல்

கேரளாவில் நேற்று நடந்த விமான விபத்தில் கேப்டன் சாதே என்பவர் பலியானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்தது

இந்த நிலையில் கேப்டன் சாதே மற்றும் இவருடைய குடும்பத்தினர் குறித்த தகவல் தற்போது வெளிவந்து ஆச்சரியத்தை அளித்துள்ளது

மும்பையை சேர்ந்த கேப்டன் சாதே கடந்த 1981-ஆம் ஆண்டு பூனாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்து சிறந்த வீரருக்கான தங்க பதக்கம் பெற்றார். அதன்பின் இந்திய விமானப்படையில் விமானியாக பணிபுரிந்தவர் போர் விமானங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் சாதே அதன் பின்னர் இந்திய பயணிகள் விமானத்தில் பணியாற்றி வந்தார். ஏர்பஸ் 320 உள்பட பெரிய விமானங்களை இயக்கும் திறன் கொண்ட கேப்டன் சாதே, பின்னர் போயிங் 737 ரக விமானங்களை இயக்கி வந்தார்

இந்த நிலையில் நேற்று அவர் இயக்கிய விமானம் இரண்டாக உடையும் என்று முன்பே கணித்து உடனடியாக அவர் விமான எஞ்சினை ஆப் செய்துவிட்டார். இதனால் விமானம் தீப்பிடிக்காமல் தப்பியது என்பதும் அதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் உயிரிழந்த கேப்டன் சாதே அவரகளின் சகோதரர் கார்கில் போரில் பங்குபெற்ற ஒரு ராணுவ வீரர் என்பதும் அவர் கார்கில் போரில் வீர மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி கேப்டன் சாதே தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பதும் அவர் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போரில் இந்தியப் படையில் இடம்பெற்று அதில் வீரமரணம் அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
நாட்டுக்காக கேப்டன் சாதே குடும்பத்தினர் 3 பேர் தற்போது வீரமரணம் அடைந்து உள்ளனர் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

From around the web