விண்ணப்பித்த அடுத்த வினாடியே இபாஸ்: இன்ப அதிர்ச்சியில் தமிழக மக்கள்

கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலையில் இருந்த தமிழக மக்கள் தற்போது இபாஸ் வாங்கி சென்று வருகின்றனர். ஆனால் இபாஸ் பெறுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதால் பலருக்கு இபாஸ் கிடைக்கவில்லை என்பதும் விண்ணப்பித்த பலருக்கும் இபாஸ் நிராகரிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 17 முதல் கொண்டு வருவதாக அறிவித்தார்.
 

விண்ணப்பித்த அடுத்த வினாடியே இபாஸ்: இன்ப அதிர்ச்சியில் தமிழக மக்கள்

கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலையில் இருந்த தமிழக மக்கள் தற்போது இபாஸ் வாங்கி சென்று வருகின்றனர். ஆனால் இபாஸ் பெறுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதால் பலருக்கு இபாஸ் கிடைக்கவில்லை என்பதும் விண்ணப்பித்த பலருக்கும் இபாஸ் நிராகரிக்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 17 முதல் கொண்டு வருவதாக அறிவித்தார். இதனையடுத்து இன்று அதிகாலை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்

ஆதார் அட்டை, செல்போன் எண் மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளை கொண்டு இபாஸ் விண்ணப்பித்த அடுத்த வினாடியே விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைத்து வருகிறது. இதனால் இபாஸ் விண்ணப்பித்தவர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்

மாவட்டம் விட்டு மாவட்டம் இபாஸ் எளிதில் கிடைத்தாலும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் இல்லாததால் சாமானிய மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் சிக்கல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web