தூத்துகுடியில் ரெளடி என்கவுண்டர்: காவலரை கொன்றதால் காவல்துறை அதிரடி

தூத்துக்குடியில் காவலரை வெடிகுண்டு வீசிக் கொன்ற ரவுடி ஒருவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தூத்துகுடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்ற பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த ரவுடியை பிடிக்க அந்த பகுதியில் போலீசார் வேட்டையை நடத்தினர் இந்த வேட்டையின்போது ரவுடி தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு போலீசார் மீது வீசப்பட்டது. இதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் பரிதாபமாக
 

தூத்துக்குடியில் காவலரை வெடிகுண்டு வீசிக் கொன்ற ரவுடி ஒருவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துகுடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்ற பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த ரவுடியை பிடிக்க அந்த பகுதியில் போலீசார் வேட்டையை நடத்தினர்

இந்த வேட்டையின்போது ரவுடி தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு போலீசார் மீது வீசப்பட்டது. இதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் பரிதாபமாக பலியானார். இதனை அடுத்து காவலர் சுப்பிரமணியன் உடலை மீட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையாக ரவுடி துரைமுத்து மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் ரவுடி துரைமுத்து உயிரிழந்து விட்டதாக போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்தது. மேலும் சிலர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

என்கவுண்டரால் உயிரிழந்த ரவுடி மீது 2 கொலை வழக்குகள் உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் காவலரை கொன்ற ரவுடியை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web