கட்சிக்கு மட்டும் விஸ்வாசமாக இருந்தால் போதும், எனக்கு அல்ல: ஒபிஎஸ் உருக்கம்

அதிமுக என்ற கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் போதும், தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஓபிஎஸ் உருக்கமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் போன்ற பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என ஒரு சில அமைச்சர்களும், திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என ஒரு சில அமைச்சர்களும் என இரு பிரிவுகளாக பிரிந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதேபோல்
 

கட்சிக்கு மட்டும் விஸ்வாசமாக இருந்தால் போதும், எனக்கு அல்ல: ஒபிஎஸ் உருக்கம்

அதிமுக என்ற கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் போதும், தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஓபிஎஸ் உருக்கமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் போன்ற பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என ஒரு சில அமைச்சர்களும், திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என ஒரு சில அமைச்சர்களும் என இரு பிரிவுகளாக பிரிந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அதேபோல் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சையையும் ஒரு சில அமைச்சர்கள் கிளப்பினார்கள். இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவுக்கு தொண்டர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்கள் எனக்கு மட்டும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள் விசுவாசமாக இருந்தால் போதும் என்றும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுகவிஅ ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்

முதல்வர் வேட்பாளர், இரண்டாவது தலைநகர் போன்ற பரபரப்பை அடுத்து ஓபிஎஸ் அவர்களின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web