"அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் கணக்கீடு முறை தேர்வு"

கிராமப்புற மாணவர் உட்பட அனைவரையும் திருப்திப் படுத்த ஏதுவாக கணக்கீடும் முறை தேர்வு என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்
 
anbil mahesh poiyamozhi

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின் மேலும் இந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக உள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும் சில மணி நேரத்திற்கு முன்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் வழங்கும் முறையை வெளியிட்டார். அதுகுறித்து தற்போது பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சில தகவல்களை கூறியுள்ளார்.students

அதன்படி அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் கணக்கீடு வெளியாகி உள்ளது என்று கூறியுள்ளார் .மேலும் கிராமப்புற மாணவர் உட்பட அனைவரையும் இவை திருப்திப்படுத்த ஏதுவாக கணக்கீடு முறை தேர்வு செய்யப்பட்டதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மதிப்பெண் கணக்கிடுவது தொடர்பாக அமைத்த குழு பரிந்துரைப்படி பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கொரோணாவுக்கு முன் மாணவர்கள் பள்ளியில் 10-ஆம் வகுப்புத் தேர்வை எழுதியதால் 50% அமைப்பின் கணக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை அனுமதிக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

From around the web