மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இருப்பினும் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் எம்எல்ஏ எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று பழனி தொகுதி எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த
 

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

இருப்பினும் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் எம்எல்ஏ எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று பழனி தொகுதி எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனை அடுத்து சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தினமும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்படுவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web