லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்: போர் வெடிக்குமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் சீன வீரர்கள் திடீரென அத்துமீறி நுழைந்ததால் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இரு தரப்பு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும் சீன தரப்பில் 35 பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய மற்றும் சீன நாடுகள் இடையிலான உறவுகளில்
 

லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்: போர் வெடிக்குமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் சீன வீரர்கள் திடீரென அத்துமீறி நுழைந்ததால் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இரு தரப்பு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது

இந்த மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகவும் சீன தரப்பில் 35 பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு இந்திய மற்றும் சீன நாடுகள் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதும், சீனாவின் செயலிகள் நூற்றுக்கணக்கில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரயில்வே ஒப்பந்தங்கள் உள்பட பல ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கவை

இருப்பினும் இந்திய மற்றும் சீன எல்லையில் நடைபெறும் பிரச்சினை குறித்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் இன்னொரு பக்கம் சீன ராணுவம் மீண்டும் எல்லை மீறியதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நேற்று மற்றும் நேற்று முன்தினம் லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அத்துமீறல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழலும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது

From around the web