நள்ளிரவில் சீனா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு: மீண்டும் கால்வானில் பிரச்சனையா?

இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு இந்தியா பகுதியில் இருக்கும் நிலையில் அந்தப் பகுதியை தன்னுடைய பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 15ஆம் தேதி இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 43 சீன வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய சீன எல்லையில் நடந்த இந்த மோதலில் பலர் உயிரிழந்தது உலக நாடுகளை
 

நள்ளிரவில் சீனா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு: மீண்டும் கால்வானில் பிரச்சனையா?

இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு இந்தியா பகுதியில் இருக்கும் நிலையில் அந்தப் பகுதியை தன்னுடைய பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது

இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 15ஆம் தேதி இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 43 சீன வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய சீன எல்லையில் நடந்த இந்த மோதலில் பலர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இரு நாடுகளும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா உள்பட பல நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென சீன தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கால்வான் பள்ளத்தாக்கு சீனாவின் பகுதி என்றும் அந்த பகுதியில் இந்தியா அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதால் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் உண்டாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது

மேலும் பல ஆண்டுகளாக கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த நள்ளிரவு அறிக்கையால் இந்திய சீன எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web