சீன LED டிவிக்களை அடித்து நொறுக்கிய மதுரை மக்கள்: பெரும் பரபரப்பு

இந்திய சீன எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் இந்திய பகுதியில் சீனா அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சீன பொருட்களை இனி மேல் உபயோகிக்கக்கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
சீன LED டிவிக்களை அடித்து நொறுக்கிய மதுரை மக்கள்: பெரும் பரபரப்பு

இந்திய சீன எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இந்திய பகுதியில் சீனா அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சீன பொருட்களை இனி மேல் உபயோகிக்கக்கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி சீனாவின் 52 செயலிகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் நடத்திய தாக்குதலை கண்டித்து வட இந்தியாவின் பல இடங்களில் சீன பொருட்களை அடித்து நொறுக்கும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை சமூக வலைதளங்கள் மூலம் தெரியவருகிறது

இதனை அடுத்து தற்போது தமிழகத்திலும் குறிப்பாக மதுரையில் சீன பொருட்களை அடித்து நொறுக்கும் சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே சீன பொருட்களை உடைக்கும் போராட்டம் நடந்தது. இதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட எல்இடி டிவிக்களை அந்த கட்சியினர் அடித்து நொறுக்கி எழுதியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீன பொருட்களை உடைப்பதால் எந்தவித பயனும் இல்லை என்றும் ஏற்கனவே அந்த பொருளுக்கு நாம் பணம் கட்டி உள்ளதால், அந்தப் பொருளுக்கு உரியவர்கள் தான் நஷ்டம் அடைகிறார்கள் என்றும் இனிமேல் சீன பொருட்களை வாங்காமல் இருப்பதே சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உண்மையான வழி என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web