நீதிபதிகள் மீது புகார் அளித்த முதல்வர்: பரபரப்பு தகவல்

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா என்பவர் செயல்படுவதாகவும் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவர் கட்டுப்படுத்துவதாகவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆந்திர அரசின் பல்வேறு முடிவுகள் நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்குகளில் அவருக்கு சாதகமாகவே முடிவுகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார் 

நீதிபதி மீதே ஆந்திர மாநில முதல்வர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி இந்த புகாரை அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமாக எழுதி அனுப்பியிருக்கிறார் என்பதால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web