சோகத்திலும் பெரும் சோகம்; உதவி கேட்கும் முதல்வர்! காரணம் "ஆக்சிசன்"!

டெல்லியில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் மற்ற மாநில முதல்வர்களிடம் உதவி கோரி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்!
 
சோகத்திலும் பெரும் சோகம்; உதவி கேட்கும் முதல்வர்! காரணம் "ஆக்சிசன்"!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி மாநகரம். டெல்லியானது உச்ச நீதிமன்றத்தையும் உயர்நீதிமன்றத்திலும் பெற்றுள்ள பெருமையும் கொண்டுள்ளது. மேலும் டெல்லியில் தற்போது முதல்வராக உள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அவர் சில தினங்கள் முன்பாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருந்தார். காரணம் என்னவெனில் ஆட்கொல்லி நோயான கொரோனாதாக்கம் அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.aravind kejiriwal

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார். அதன் பின்னர் அவர் ஒரு வார காலத்திற்கு டெல்லியில் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனாதாக்கம்  தலைவிரித்தாடுகிறது என்றே கூறலாம். மேலும் டெல்லியில் நாளுக்கு நாள் நோய் தாக்குதல் மட்டுமின்றி ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்து அங்குள்ள மக்களை மிகுந்த சோகத்தில் உண்டாக்கியுள்ளது. மேலும் டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிசன் தட்டுப்பாட்டினால் உயிரிழப்புகளும் அதிகம் இழந்துள்ளது.

இதனால் டெல்லி மாநகரமே தற்போது மிகுந்த சோகத்தில் உள்ளனர். எனினும் டெல்லிக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கடிதம்  எழுதியுள்ளார். மேலும் இந்த கடிதத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியதாக கூறப்படுகிறது. அதன்படிடெல்லியில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் மற்ற மாநில முதல்வர்களிடம் உதவி கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளது சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

From around the web