ஆளுநரோடு தலைமைச் செயலாளர் இன்று மாலை சந்திப்பு!இவர்களோடு டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திக்க உள்ளார்!
 
ஆளுநரோடு தலைமைச் செயலாளர் இன்று மாலை சந்திப்பு!இவர்களோடு டிஜிபி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழகத்தில் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் தற்போது முதல்வர் ஆட்சி இல்லை என்றே கூறலாம். மேலும் தமிழகத்தில் மே 2ஆம் தேதிக்கு பின்னர் முதல்வர் ஆட்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர் பல  தலைமை தாங்கி வருகிறார். மேலும் அவர் சில தினங்களாக பல்வேறு உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தார். காரணம் என்னவெனில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா நோயின் இரண்டாவது மீண்டும் எழுந்துள்ளது.panwarilal brohit

இதனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள ஒவ்வொரு மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகள் தளர்வுகள் போன்றவைகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. மேலும் தமிழகத்தில்இரவு நேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.அவைகளில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் சமூக இடைவெளி ஏற்படுவது  போன்றவைகளும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தமிழக தலைமை பொதுச் செயலாளராக ராஜீவ்  ராஜன் உள்ளார். அவர் இன்று மாலை தமிழகத்தின் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படிதமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி  திரிபாதி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா அதிகரித்து வருவது மற்றும் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்தும் தலைமைச் செயலாளர் ஆளுனரிடம் விளக்குகின்றார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

From around the web