"18+ வயது தடுப்பூசி" போடும் பணியினை தொடங்கி வைத்தார் "முதல்வர் முக ஸ்டாலின்"!!

18 முதல் 44 வயது வரையிலான 3.6 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்!
 
stalin

தற்போது நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த பாதிப்பு காலத்தில் தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் பிடித்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் இந்த கட்சியின் சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார். மேலும் அவர் தான் தேர்தல் அறிக்கையாக கூறிய அத்துணை வாக்குறுதிகளையும் தற்போது வரிசையாக நிறைவேற்றி வந்து மக்கள் மனதில் தற்போது நல்லதோர் இடத்தினை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர் தமிழகத்தில் 2 வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

stalinஅதன்படி தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் முதல்கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் இந்த பணியினை தொடங்குவதாக கூறப்பட்டது. அதன்படி தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோர் காண தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்தார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

மேலும் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார் முதல்வர் மு க ஸ்டாலின். திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வளாகத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி முகாம் அமைத்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இதில் அவருடன் அமைச்சர் சுப்பிரமணியம் உள்ளார். மேலும் பல்வேறு அதிகாரிகளும் அவரை சுற்றி உள்ளனர். மேலும் தமிழகத்தில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கான 3.6 கோடி பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அங்கேயே தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

From around the web