முதல்வரின் தாயார் உடல்தகனம்: அமைச்சர்கள் அஞ்சலி!

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். 93 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்

தாயார் மரணச் செய்தி கேட்டு உடனடியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கேபி அன்பழகன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வரின் தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர் 

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயாரின் உடல் சற்று முன்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் எரியூட்டப்பட்டது. முதல் அமைச்சரின் சகோதரர் தாயாரின் உடலுக்கு எரியூட்டினர்

முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் முதலமைச்சரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web