பிரதமருக்கு முதல்வர் கடிதம்; இந்த கடிதத்தில் என்ன இருக்கும்?

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசிகள் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்!
 
பிரதமருக்கு முதல்வர் கடிதம்; இந்த கடிதத்தில் என்ன இருக்கும்?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆளும் கட்சியான அதிமுகவுடன்  பாஜக கட்சி கூட்டணி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிமுகவின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.

modi

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இக்கடிதத்தில் அவர் தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி கடிதத்தில் அவர் தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பத்து நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகளை முன்கூட்டியே அனுப்பி வைக்கவும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் ரெம்டிசிவிர் தயாரிக்கும் மாநிலங்கள் பிற மாநிலங்களுக்கும் அந்த மருந்தை அனுப்பி உதவ அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

From around the web