"தமிழகத்துக்கு போதிய தடுப்பூசிகள் வழங்க வேண்டும்"-முதலமைச்சர் கடிதம்!!

தமிழகத்துக்கு போதிய தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
stalin

தற்போது தமிழகத்தில் கொரோனா காலம் என்று கூறலாம். அந்த விதத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோய் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் நம் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின். மேலும் திமுக கட்சி தனது பத்தாண்டு பின்னர் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம். அதன்படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்களை நியமித்துள்ளார்.covid 19

மேலும்அவர் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கி அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் நான்கு வாரமாக ஊரடங்கு அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.  தமிழகத்துக்கு பல்வேறு மருந்து பொருட்கள் போன்றவைகளை தேவையான அளவு வழங்கப்படவில்லை என்றும் அவ்வப்போது எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல கட்சியினரும் முழக்கமிட்டு வருகின்றனர்.  தற்போது நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வராததால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிகழ்வு என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா அதிகமாக உள்ள நிலையில் போதிய அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்துள்ளார். மேலும் மத்திய அரசு மூலமும் மக்கள் மூலமும் தலா 50 லட்சம் கருவிகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

From around the web