"ஊரடங்கு நீட்டிப்பு" குறித்தான முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நிறைவு!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நிறைவு செய்யப்பட்டது
 
lockdown

தற்போது நம் தமிழகத்தில் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின் .மேலும் அவர் சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தினார். அதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் சில வாரங்களாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழகத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்களுக்கு முற்றிலுமாக கூடுவதற்கு தடை விதித்திருந்தார். இன்றைய வாரத்துடன் நிறைவு செய்யப்பட உள்ள நிலையில் மேலும் இது குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியாகும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது,stalin

அது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று கூடப்பட்டது. அதன்படி தற்போது முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு பள்ளிகள் திறப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தற்போது நிறைவு செய்யப்பட்டது. ஆலோசனையில் அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பு குறித்தும்  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல். திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web