"மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம்"-முதல்வர்!!

மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்
 
aathithiravidar

தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் தான் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறார். மேலும் தற்போது நம் தமிழகத்தில் தொடர்ந்து சட்டப்பேரவை கூடப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை எதிர்க்கட்சியினரும் வரவேற்கின்றனர்.stalin

தற்போது முதல்வர் முக ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் பற்றி அவர் கூறியுள்ளார். அதன்படி மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்க தனி சட்டம் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆதிதிராவிடர் நலத் துறையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சேலம் கிருஷ்ணகிரி மதுரை நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web