தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துக்கள் கூறும் தமிழக முதல்வர்!

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி திருநாளை வாழ்த்துக் கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
 
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துக்கள் கூறும் தமிழக முதல்வர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பல கட்சி கூட்டணி களமிறங்கியுள்ளன. இதில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி  தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாஜக கட்சியையும், பாமக கட்சியையும் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த முறை போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து வேட்பாளராக அறிவித்தார்.

eps

அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் சட்டமன்ற தேர்தல் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சில தினங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசின் வேறு சில விதிகளையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தது. முக கவசம் கட்டாயம், திரையரங்கில் 50 % இருக்கை போன்ற பல்வேறு விதிகளையும் சமூக இடைவெளி காண விதிகளையும் விதித்திருந்தது.

 இந்நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது .இந்நிலையில் தற்போது தமிழகம் எடப்பாடிபழனிசாமி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் யுகாதி திருநாளை உற்சாகமாக கொண்டாடும் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினார். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தமிழ் மக்களோடு ஒற்றுமையாக வாழ்வது பெருமை சேர்க்கிறது என்றும் அவர் கூறினார். வாழ்வில் வளமும் நலமும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என முதல்வர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

From around the web