அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட உள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்!

அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தை பார்வையிடுகிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
 
anna

தற்போது மக்கள் அனைவரிடமும் தமிழக முதல்வர் என்று கேட்டால் அவர்கள் கூறுவது மு க ஸ்டாலின் தான். அந்த படி தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மட்டுமின்றி அவரது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் பலவும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது திறமையை நிரூபித்து உள்ளனர் என்பதும் உண்மை தான்.stalin

இந்த நிலையில் தமிழக முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் மக்களுக்கு பயனடையும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார். மேலும் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் பலரும் அந்த துறையில் சிறந்தவர்களாக  காணப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிகப் பெரிய தூணாக விளங்கிய அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தை பார்வையிடுவதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை காஞ்சிபுரம் சென்று அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தை பார்வையிட உள்ளார்.அதனைத் தொடர்ந்து ஒரு கோடி கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஹூண்டாயின் இருங்காட்டுக்கோட்டை ஆலையையும் பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web