"இனி  பிற மாநிலங்கள் நாடுகளிலும் தொடரும் ஆய்வு"-தமிழக முதல்வர்;

கேரளா ஆந்திரா கர்நாடகா ஒரிசாவிலும் ஆய்வு நடைபெறும் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்
 
keeladi

தற்போது நம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூடியுள்ளது. மேலும் இதில் பல்வேறு விதமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் இதில் பல முக்கியமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் கீழடி என்பது மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. இந்த கீழடியில் அவ்வப்போது பண்டைய நாகரிகம் பற்றிய தகவல்கள் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்து கொண்டே வருகிறது.stalin

தற்போது தமிழகத்தோடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வேறு நாடுகளிலும் ஆய்வு நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். கேரளா ஆந்திரா கர்நாடகா ஒடிசாவிலும் ஆய்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும் கேரளாவில் பட்டணம் என்ற பகுதியில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். ஆந்திராவின் வேங்கி என்ற பகுதியில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் தலைக்காடு என்ற பகுதியிலும், ஒடிசாவில் பாலூர் போன்ற வரலாற்று சிறப்புடைய இடங்களிலும் ஆய்வு நடைபெறும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நாடு கடந்தும் தொல்லியல் அகழ்வாய்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார். எகிப்து, ஓமன் நாட்டில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்தோனேசியா தாய்லாந்து மலேசியா ஆகிய நாடுகளிலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என்றும் முதல்வர் கூறினார். தமிழர் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.

From around the web