அதிமுகவை எதிர்க்கவே திமுக கூட்டணி பிரச்சாரத்தில் முதல்வர்!

அதிமுகவை எதிர்க்கவே திமுக கூட்டணி அமைத்துள்ளது என திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியாக அதிமுக,பாஜக மற்றும் பாமக கட்சியை வைத்து தேர்தலை சந்திக்கின்றன.மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி தங்கள் கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்து தேர்தலை சந்திக்கின்றன. மேலும் அதிமுக தரப்பிலிருந்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி  அறிவிக்கப்பட்டார்.

admk

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்  முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் மத்தியில் தற்போது அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவர் கூறினார் ,அதிமுகவை எதிர்க்க திமுக கூட்டணி அமைத்தது எனவும் கூறினார். மேலும் திமுக கூட்டணி  ஒருமித்து அமைக்கப்பட்டது அல்ல அது  அதிமுகவை எதிர்க்க அமைக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.மேலும் திமுகவால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை என திருப்பரங்குன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

From around the web