முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93 

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்ததாகவும் வயது மூப்பின் காரணமாகவும் அவர் காலமானதாக தெரிகிறது 

இந்த நிலையில் தாயாரின் மறைவு குறித்து செய்தி அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு உடனடியாக தாயாருக்கு அஞ்சலி செலுத்தினார் 

முதல்வரின் தாயார் மறைவை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் தாயாரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web