மயிலாடுதுறை சின்ன கடை தெருவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை!

திமுக ஒரு கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல்வேறு கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகப்படுதப்பட்டது. வேட்பாளர்கள் சில தினங்களாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் அதே தினத்தில் கொளத்தூர் தொகுதியில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

eps

மேலும் அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பல கட்சித் தலைவர்கள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது மயிலாடுதுறை சின்னக் கடைத் தெருவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் கூறுகிறார். திமுக ஒரு கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சனம் செய்கிறார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக தலைவர் மக்களிடம் மனுக்களை வாங்க மாட்டார் எனவும் முதல்வர் பழனிசாமி கூறுகிறார்.

மேலும் நவீன யுகத்தில் ஸ்டாலின் பெட்டியில் மனுக்களை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார் எனவும் முதல்வர் குற்றச்சாட்டு வைக்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது முகஸ்டாலின் எப்போது மக்களை சந்தித்து, ஏன் மனுக்களை வாங்க வில்லை எனவும் கூறுகிறார் மேலும் அதிமுக அரசானது விவசாயிகளின் குறைகளை தீர்க்க உதவும் உழவன் செயலி அறிமுகப்படுத்த உள்ளது எனவும் கூறுகிறார்.

மேலும்  செல்போன் மூலமும் புகார் அளித்து அதற்கான தீர்வு கிடைப்பதற்காக அதிமுக அரசு வழி செய்கிறது எனவும் கூறுகிறார். மணல்மேட்டில் அரசு மற்றும் கலை கல்லூரி நிறுவி அதிமுக அரசு சாதித்தது எனவும் கூறிய அவர் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் இந்தியாவிலேயே கல்வி சிறந்த மாநிலம் தமிழ் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொள்கிறார். மயிலாடுதுறையை மாவட்டமாக மாற்றியது நிறுவி  ஸ்டாலின் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் முதல்வர் கூறுகிறார்.

From around the web